சர்வதேச அகதிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு

சர்வதேச அகதிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் திருகோணமலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் குறித்த அமைச்சின் மேலதிகச் செயலாளர் பாஸ்கரன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, அரச அதிகாரிகள் மற்றும் கடந்த கால யுத்தத்தின்போது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்தோர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதன்போது, யுத்தத்தின் இடம்பெயர்ந்து வெளி நாடுகளில் தஞ்சமடைந்து மீண்டும் நாடு திரும்பியவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும், நாடளாவிய ரீதியில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களுக்காக 567 வீடுகளும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள் 60 பேருக்குமான வீட்டுத்திட்டங்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here