தினேஷின் கேள்வியால் நாடாளுமன்றத்தில் அமளி

டெங்கு நோய் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்வியால், நாடாளுமன்ற அவையில் இன்று ஏற்பட்ட சூடான வாக்குவாதங்கள் காரணமாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், பிற்பகல் 2.10 அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

டெங்கு நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வரவுள்ளதாக சபாநாயகர் அவைக்கு அறிவித்தார்.

இதனையடுத்து அமர்வுகள் 2.35வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், சுகாதார அமைச்சர் வந்தவுடன் அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

டெங்கு நோய் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்வியால் ஏற்பட்ட விவாதத்தை அடுத்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, டெங்கு நோய் தொடர்பாக நாளைய தினம் அறிக்கையிடப்படும் என கூறினார்.

எனினும், இது அவசரமான நிலைமை என்பதால், அரசாங்கம் உடனடியாக தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என தினேஷ் குணவர்தனவும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே நாடாளுமன்றில் ஏற்பட்ட அமளியை கவனத்தில் எடுத்துக்கொண்ட சபாநாயகர் அமர்வுகளை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here