பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள வரபிரசாதம்!

பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாட்டில் உள்ள 45 இலட்ச பாடசாலை மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குடும்பத்தில் 5 பாடசாலை மாணவர்கள் இருந்தால், அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி கிடைக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த காப்புறுதியின் கீழ் பாடசாலை மாணவர் ஒருவர் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்சம் வரையில் வைத்தியசாலை கட்டணத்தை செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here