பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி

அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரேரணை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டபோதே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 6.28 சதவீதத்தில் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

9 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் பேருந்து கட்டணம் சீரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here