மக்கள் எழுச்சியை முதலமைச்சருக்கு எதிரானவர்கள் உணர்ந்திருப்பார்கள்!

தமிழ் மக்களின் எழுச்சியினை முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தவர்கள் உணர்ந்திருப்பார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விடயத்தையும் இந்த மக்கள் எழுச்சி எடுத்து காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடமாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் 15 மாத காலப்பகுதியே இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்கள் எதிர்ப்பார்க்கின்ற தேவைகளை முடிந்தளவிற்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here