முன்கூட்டியே கொழும்பிலிருந்து வெளியேறிய அமெரிக்க ஏவுகணை போர்க்கப்பல்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புபணிகளில் ஈடுபடும் நோக்கில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க ஏவுகணை போர்க்கப்பல் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி 300 மாலுமிகளுடன் கொழும்பு வந்த யு.எஸ்.எஸ் லேக் எரி என்ற அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதியே கொழும்பை விட்டு புறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் குறித்த கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அனர்தங்களினால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் இலங்கை படையினருடன் இணைந்து அமெரிக்க படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்கூட்டியே அமெரிக்க ஏவுகணை போர்க்கப்பல் புறப்பட்டுச் சென்றமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here