ரயிலில் மோதுண்ட வாகனம்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்

ரயில் விபத்தொன்றில் அதிஷ்டவசமாக ஒரே குடும்பததை சேர்ந்த 6 பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று அழுத்கம பகுதியில் பதிவாகியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை நால்வர் பயணித்த வேன் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவர்களை பென்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

களுவாமோதர ரயில் வீதியில் பயணிக்கும் போது குறித்த வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவர்கள் பயணித்த வாகனம், ரயில் வீதிக்கு நடுவே பயணிக்கும் போது மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த சமுத்ரா தேவி ரயிலில் மோதியுள்ளது.

எப்படியிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டமையினால் வேன் சற்று பின் பக்கமாக வந்துள்ளது. இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் வேனிற்கு மாத்திரம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here