லண்டன் மசூதி தாக்குதல் – குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் மசூதி அருகே தொழுகை முடித்துவிட்டு வந்தவர்கள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்தியவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Finsbury Park மசூதிக்கு வெளியில் வழிபாட்டாளர்கள் மீது வான் ஒன்றின் மூலம் நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்தியவரின் புகைப்படத்தை பொலிஸார் இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

Finsbury Park மசூதியில் ரமழான் நோன்பு துறக்கும் வேளையில் குறித்த வெள்ளை நிற வான் மக்கள் மீது பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸார் விரைந்து சென்று வேன் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கார்டிப் நகரைச் சேர்ந்த டெரன் ஆஸ்பர்ன் (45) என்று விசாரணை மூலம் பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லண்டன் பாலத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் மேயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here