வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது! சம்பிக்க ஆதங்கம்

வடமாகாணத்தை தமிழ் மக்கள் உரிமை கோர முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமாகாணமானது தமிழ் மக்களின் பூர்வீக நிலம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர், வடக்கில் தமிழர்களின் இனவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வடமாகாணம் தனித்த மாகாணம் அல்ல. நாட்டின் ஏனைய பகுதியை போன்றே வடக்கும் அனைத்து தரப்பினர்களும் வாழ்ந்த பகுதியாகும்.

இவ்வாறான நிலையில் தமிழர்கள் மாத்திரம் வடபகுதியை உரிமை கோர முடியாது. யுத்தம் காரணமாகவே வடக்கில் இருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வெளியேறிருந்தனர்.

எனவே, வடமாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம் அல்ல எனவும், தமிர்கள் வடமாகாணத்தை உரிமை கோர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here