வடமத்திய மாகாண சபையில் குழப்பநிலை!

வடமத்திய மாகாண சபையின் தவிசாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பில் இன்று மாகாண சபை அமர்வில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண சபையின் தவிசாளர் டீ.எம்.ஆர்.சிரிபாலவுக்கு எதிராக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்க நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக தவிசாளர் முன்னர் உறுதியளித்திருந்தபோதிலும் இன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இதனையடுத்து எதிர்க்கட்சியினர் மாகாண சபை அமர்வில் பெரும் அமளியில் ஈடுபட்டதுடன் தவிசாளர் மீதான நம்பிக்கை முற்றாக இழக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடமத்த்திய மாகாண சபையில் மைத்திரி- மஹிந்த அணி மோதல் காரணமாக அண்மைக்காலமாக மாகாண சபை நிர்வாகத்தை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here