வர்த்தகரிடம் பணத்தை கொள்ளையிட்ட நடன அழகிகள் கைது

வர்த்தகர் ஒருவரின் 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த யுவதிகள் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் அழகிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட களியாட்ட விடுதியின் மற்றுமொரு யுவதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பணத்தை கொள்ளையிட்ட யுவதிகளில் ஒருவர் கசினோ சூதாட்டத்திற்கு அடிமையானவர் எனவும் பணத்தை சூதாட்டத்தில் செலவிட்டு தோல்வியடைந்து விட்டதாக அந்த யுவதி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை இழந்த வர்த்தகர் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் அடகு வைக்கப்பட்டு மூழ்கி நிலையில் இருக்கும் தங்க ஆபரணங்களை மீட்கும் வர்த்தகத்தை செய்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களியாட்ட விடுதியில் பணிப்புரியும் யுவதிகள் இருவர் தமது தங்க ஆபரணங்களை மீட்டு தருமாறு கூறி வர்த்தகரை அழைத்துள்ளனர்.

பின்னர், இந்த யுவதிகள் இருவரும் வர்த்தகரிடம் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்ட யுவதிகளை வர்த்தகர் சில காலமாக அறிந்து வைத்திருந்தவர் எனவும் கூறப்படுகிறது. வர்த்தகர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தாம் யுவதிகளை கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here