நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் நேற்று மீன் பிடித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, அவர்களிடம் இருந்து படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், காங்கேசன் துறை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்துவதற்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆனநிலையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here