வடக்கில் புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குரு குலராஜா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் சிலரிடம் சுயவிபர கோவையை வழங்குமாறு கேட்டு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டையடுத்து மாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த அமைச்சர்களின் பதவிகளை தற்காலிகமாக முதலமைச்சர் ஏற்று கொண்டிருக்கின்றார்.

புதிய அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக முதலமைச்சர்  மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தங்களது சுயவிபர கோவைகளை இன்று மதியத்திற்குள் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சர் கேட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

முதலமைச்சரின் இந்த சுயவிபரகோவை பெறும் நடவடிக்கையானது புதிய அமைச்சர்கள் தெரிவுக்கானது என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here