இராவணாகொடையிலிந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து

இராவணாகொடையிலிந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி போக்குவரத்து சமிக்ஞை கம்பம் ஒன்றில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராவணாகொடையிலிருந்து பயணிகளை ஏற்றி புறப்பட்டு சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here