நாட்டை தீ வைக்கும் அவசியம் எமக்கு இல்லை

நாட்டை தீ வைக்க தமக்கு அவசியமில்லை என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதியை நேற்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாம் கடந்த காலங்களில் வெளிப்படுத்திய பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு சிறந்த மேடையொன்றை அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் ஏற்படுத்திக் கொடுத்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

நாட்டை தீ வைக்க எமக்கு அவசியமில்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பாதையொன்றை உருவாக்கும் நடவடிக்கையையே நாம் இதுவரை மேற்கொண்டு வந்தோம்.

அதற்கு இன்று சிறந்த சூழல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் கூறியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here