நியூசிலாந்தில் உயிரிழந்த யாழ். பெண் நீதிபதி

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி தனது 81 ஆவது வயதில் நியூசிலாந்தில் காலமாகியுள்ளார்.

யாழ்.புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் நேற்றைய தினம் காலமாகியுள்ளார்.

பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கல்விகற்று சட்டத்துறைக்குள் பிரவேசித்து 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞர் ஆனார்.

பின்னர் 1988 ஆம் ஆண்டு, மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று மல்லாகம், மன்னார் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்றி இறுதியாக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் திருகோணமலையில் சேவையாற்றிய காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புப் பிரிவை ஆரம்பித்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here