இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் கடற்படையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கடற்பகுதியின் தென்கிழக்கு திசையில் 17 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகொன்றும், கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நாகர்கோவில் கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுப்பட்ட, தமிழக மீனவர்கள் 17 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மொத்தமாக தற்போது இலங்கையின் தடுப்பில் தமிழக மீனவர்கள் 45 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here