வறட்சியால் 9 இலட்சம் மக்களுக்கு குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு

இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடி நீர் மற்றும் உணவு தேவைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வறட்சியால் பாதிப்படைந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒன்பது இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் குடி நீர் மற்றும் உணவு போன்ற தேவைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here