சைட்டம் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி(சைட்டம்) நிறுவனத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவ கற்கை நெறியை ரத்து செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளினால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் சில முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் தீர்மானம் மிக்கதோர் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் மாணவர்களை வெளிநாட்டில் பட்ட கற்கை நெறிகளுக்காக அனுப்பி வைக்கும் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியினால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here