ஐ. நா விசேட பிரதிநிதி இலங்கை வருகிறார்

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பென் எமர்சன் 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 14ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் பென் எமர்சன், பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பான துறைசார் விடயங்கள் மற்றும் அவை மனித உரிமைகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பதற்கு ஏதுவாக அமையும் விதம் தொடர்பாக அவரே தனியாக தகவல்களை திரட்ட உள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி தனது விஜயத்தின் உள்ளடக்கி தயாரிக்கும் அறிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறித்த அலுவலகம் கூறியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here