ஜனாதிபதி மைத்திரியின் கோபம்!

இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இலங்கையில் அரசொன்று உண்மையில் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலை முதல் இரவுவரை நாட்டில் ஆங்காங்கே ஏற்படும் கலவரங்களையும் பதற்ற நிலைகளையுமே காட்டிவரும் தொலைக்காட்சிகள் உண்மையில் என்ன நடக்கிறது என்பதையோ, அரசின் அபிவிருத்தித் திட்டங்களையோ மூடிமறைத்து விடுகின்றன.

நாட்டில் நிலவிவரும் அமைதியான சூழ்நிலையை தலைகீழாகப் புரட்டிக்காட்டி நாடு கொந்தளித்த நிலையில் இருப்பதாகவே தொலைக்காட்சிகள் காட்டிவருகின்றன. இதன்மூலம் மக்களைத் திசை திருப்பும் கைங்கரியம் நிறைவேறி வருகின்றது எனத் தெரிவித்தார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான வார்டொன்றைத் திறந்து வைத்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் பக்கச்சார்பாக செயற்படாமல் உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here