முல்லைத்தீவு மாணவிகள் சாதனை!

மாகாணமட்ட பாடசாலைகளுக்கு இடையேயான 2017 ஆம் ஆண்டுக்கான பளு தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் ஐந்து தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்களை பெற்று இரண்டாம் நிலைக்கு தெரிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் காணப்படுகின்றது.

குறித்த போட்டிகளில் 16 வயதுப் பிரிவில் ப.டர்சனா, தே.தர்சிகா ஆகியோர் முதலாம் இடத்தினையும், அ.ஸ்ரன்சிகா 2 ஆம் இடத்தினையும், இ.ஜீவிதா , சி.மேனகா ஆகியோர் 3ஆம் இடத்தினையும் மற்றும் கா.லுகேந்தினி 4 ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், 18 வயதுப் பிரிவில் ர.லக்சனா, ஞா.நிருசா ஆகியோர் முதலாம் இடத்தினையும், 20 வயதுப் பிரிவில் ஜெ.நிதுசா 2ஆம் இடத்தினையும், ம.கஜனி முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here