கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் நேற்று வட்டவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டவளை – டெம்பஸ்டோ தோட்ட குடியிருப்புக்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலும் மற்றும் தேயிலை மலைகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய மின் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here