சுகாதார முகாமைத்துவ உதவியாளரை பலியெடுத்த டெங்கு

டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ராகம கொழும்பு வைத்தியசாலையின் தலைமை சுகாதார முகாமைத்துவ உதவியாளர் அந்த வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

தலைமை சுகாதார முகாமைத்துவ உதவியாளர் அனோமா திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயதாகின்றது. ஒரு பிள்ளையின் தாயான அவர் எல்பிட்டிய ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

கடந்த 25ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக ராகம வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த அனோமா திஸாநாயக்க என்வரின் சடலம் நேற்று மாலை வைத்தியசாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி அவருக்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here