நாவற்குழி விகாரை! நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நீதிமன்றம்

யாழ். நாவற்குழியில் உருவாகும் மிகப்பெரிய விகாரையின் நிர்மாணப் பணிகளை தடைசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் இன்று (07) இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21ம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதுவரை விகாரையில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழி பகுதியில் உரிய அனுமதிகள் பெறாமல் நிர்மாணிக்கப்படும் விகாரையின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி விகாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமணதேரருக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த விகாரையை அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையினால் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here