புதிய அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்ப்போர் அதிகார போதை கொண்டவர்கள்

அதிகார போதை காரணமாகவே புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பெந்தர மிரிஸ்வத்தை பிரதேசத்தில் நேற்று கம்உதாவ வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதிகார வேட்கையில், அதிகார போதையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அப்படியே வைத்துக் கொண்டு மீண்டும் அந்த நாற்காலிக்கு வந்து, நாட்டின் பொதுப் பணத்தை கொள்ளையிட முயற்சிப்போருக்கு நாங்கள் கொண்டு வர இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தேசத்துரோக செயலாக இருக்கலாம்.

பௌத்த மதத்திற்கு வழங்க வேண்டிய விசேட முன்னுரிமையை நாங்கள் வழங்குவோம். நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தை பரவலாக்குவோம்.

அப்போது யார் பதவிக்கு வந்தாலும் கட்டளை பிறப்பிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here