யாழில் காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி நூல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி நூலின் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த நூல் வெளியிட்டு விழா நாளை சனிக்கிழமை (08) பிற்பகல் 03 மணி முதல் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ப. தெய்வீகன் நூலினை எழுதியுள்ளார்.

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் புதுவிதிப் பத்திரிகையின் ஆசிரியர் த. பிரபாகரன் நூலின் வெளியீட்டுரையை ஆற்றவுள்ளார்.

குறித்த நூலை டான் தொலைக்காட்சிக் குழுமத் தலைவர் எஸ்.எஸ். குகநாதன் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை தமிழ் மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ. பி. மதன் பெற்றுக் கொள்வார்.

கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான யதீந்திரா, திருச்சிற்றம்பலம் பரந்தாமன் ஆகியோர் நிகழ்த்துவர்.

இந்த நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here