வட மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த தமிழிசை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வட மாகாண சபை உறுப்பினர்களை நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது மாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாகாணத்தின் தேவைகள் மற்றும் போருக்கு பின்னரான மக்களின் வாழ்க்கை நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும், புதிய வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here