ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில், செனன் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது ஹட்டனிலிருந்து வட்டவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது காயமடைந்த லொறியின் சாரதி சிகிச்சைகளுக்காக வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here