திருநெல்வேலியில் திடீரெனத் தீப்பற்றிய முச்சக்கர வண்டி

யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் ஞான வைரவர் ஆலயத்திற்கருகில் இயங்கிவரும் கராஜ் ஒன்றில் திடீரென முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றிய நிலையில் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று பகல்- 12.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த கராஜ்ஜின் தொழிலாளர்கள் முச்சக்கர வண்டியொன்றைத் திருத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது முச்சக்கரவண்டித் தாங்கிக்குள் பெற்றோல் நிரம்பிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோல் கசிந்த நிலையில் திடீரெனக் குறித்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்துள்ளது.

நிலைமையை உணர்ந்து சுதாகரித்துக் கொண்ட தொழிலாளர்கள் எரிந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியைத் தூக்கி வந்து கராஜ்ஜிற்கு வெளியே வீசியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், பல லட்சம் ரூபா பெறுமதியான குறித்த முச்சக்கர வண்டி முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here