யாழில் பல பகுதிகளில் அடைமழை! மகிழ்ச்சியில் விவசாயிகள்

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை இன்று இரவு 7.30 மணி முதல் தொடர்வதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் வடமராட்சியின் சில பகுதிகளிலும் மழையுடனான கால நிலை காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலை நீண்ட நாட்களாக தொடர்ந்திருந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளமை யாழ். மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here