யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு, இன்றைய தினம் மன்னார் புனர்வாழ்வு அமையத்தினால் ‘காந்தள் புலம் பெயர் இளையோர் உறவுகளுடன் பாசம் பகிரும் பயணம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் நகர சபையின் புதிய அலுவலகத்தின் பிரதான மண்டபத்தில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வல் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here