பிரபாகரனின் பெருமையை போற்றும் சிங்கள மக்கள்!

விடுதலைப் புலிகளின் தலைமை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள், இயற்கையை மிகவும் மதித்தவர்கள் என்பது பலரும் அறிந்ததே, அவ்வாறான தோற்றப்பாடு சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த கல்லறையை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அந்தப் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கல்லறை பகுதியை விடுதலைப் புலிகளே அழிக்கவில்லை. ஆனால் தற்போது திருடர்களால் அழிக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு கிராம மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமேரியன் கல்லறை 25 ஏக்கர் நிலப்பரப்பாகும். அங்கு தேக்கு மரங்களை வெட்டும் மோசடி வர்த்தகம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகி்னறது.

ஆரம்பகால மனிதர்களின் 89 கல்லறைகள் அங்கு பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here