மகிந்தவின் ஆசையால் கைது செய்யப்படும் நிலையில் கோத்தபாய!

பிரதமர் ஆசையில் இருக்கும் மகிந்த அமரவீர ஒரு மாத காலத்திற்குள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதாக தெரிவித்து வருகிறார் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வது குறித்து வெளியான தகவலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த,

கோத்தபாய ராஜபக்ச மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், தேவையில்லாத விளைவுகளையும், விபரீதங்களையும் சந்திக்க நேரிடும்.

நாட்டில் பிரதமர் பதவியை எதிர்பார்த்துத் தான் மகிந்த அமரவீர இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் மகாநாயக்க தேரர்களை சந்தித்த கோத்தபாய தன்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோல்வியடையச் செய்து, யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காகவே என்னைக் கைது செய்வதற்கு முயற்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும், கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்து முற்றிலிலும் போலியானது என்றும் அவ்வாறான எந்தவொரு கருத்தையும் தாம் முன்வைக்கவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here