மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த முஹம்மது அசனார் முஹம்மது அபூபக்கர் (வயது 86) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சைக்கிளை உருட்டிச் சென்று கொண்டிருந்த இவரை சிறிய வாகனமொன்று மோதியுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தை அடுத்து குறித்த வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here