முல்லைத்தீவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

முல்லைத்தீவில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், புதுகுடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று உள்ளிட்ட பிரதேச சந்தைகளிலும் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஒரு பிடி கீரையின் விலை 50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தைகளில் குறைந்த விலையில் கீரை மட்டுமே உள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே இந்த மாவட்டத்தில் அரிசியின் விலை அதிகரித்துள்ள நிலையில் மரக்கறியின் விலையும் தற்பொழுது அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here