யாழ்.வடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சூடு! இளைஞர் ஒருவர் பலி

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் வாகனம் மீது பொது மக்கள் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்தவர்களை இடை மறித்த போது நிற்காததன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here