கூட்டுறவு உதவி ஆணையாளரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கூட்டுறவு உதவி ஆணையாளரின் வாக்குறுதியை அடுத்து கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மவாட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர்
வாக்குறுதி வழங்கியதையடுத்து  கிளிநொச்சி பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் பணியாளர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண பேரிணையத்தில் உள்ள தமது நிதிகளை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர் அங்கத்தவர்கள் ஆகியோர் இன்று திங்கட்கிழமை 10.07.2017 காலை 07.30 மணிக்கு டிச்போச் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பு பேராட்டத்தை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மற்றும் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின்
தலைவர் கனகையா மதனரூபன் மற்றும் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் ஆகியோரை அழைத்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து  ஒரு மாத காலத்திற்குள் பேரிணையத்தில் இருந்து  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் விலகுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுயளித்ததைத் தொடர்ந்து கனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here