ஐ.தே.க. உறுப்பினர்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் தீவிரம்

நாடு முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்திருக்கும் பிரதமர் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமோக வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி அமைப்பாளர்கள் செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருக்கின்றார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி, லக்வினிதா அமைப்பு உட்பட சகல பிரிவுகளையும் பலப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here