தேர்தல் முறைமையிலேயே மாற்றம் : பௌத்த மதம் தொடர்பாக இல்லை

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த சமயம் தொடர்பில் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கமைய ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் விடப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தெஹியத்தகண்டிய மகாவலி சாலிக்கா மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்ற வண.மக்குருப்பே பஞ்ஞாசேகர தேரருக்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தேச வரைபு கூட, இதுவரை தயாரிக்கப்படவில்லை. அவ்வாறு தயாரிக்கப்படுமானால் அதனை நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் முன்வைத்து அனைத்து முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களையும் கருத்தில் எடுத்து திருத்தங்களுடன் அந்த உத்தேச வரைபை தயாரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள விடயங்களில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதுடன், 1972 அரசியலமைப்பில் பௌத்த சமயம் தொடர்பில் இருக்கும் பந்தியிலும் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு இருக்கும் அக்கறை தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாரி தேர்தல் தொடர்பான கோரிக்கை கொண்டு வருவது ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதிலும் அதிகார பகிர்விலும் ஒருபோதும் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாடான முறையில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here