பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். இளைஞரின் உடல் நல்லடக்கம்

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனத்தை பொலிஸார் இடை மறித்த போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றது.

இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்.துன்னாலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, நேற்றைய தினம் யாழ்.துன்னாலை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் விஷேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்று, வேடுண்டை மயானத்தில் சடலம் புதைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here