அரசாங்கத்தை கவிழ்க்க அவசரப்பட வேண்டாம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒரு இராஜாங்க அமைச்சரும் இரண்டு பிரதியமைச்சர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க, பிரதியமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ, துலிப் வீரசேகர ஆகியோரே முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

இதன்போது நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க இடமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க அவசரப்பட வேண்டாம் எனவும் மகிந்த ராஜபக்ச இந்த மூவரிடமும் கூறியதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 18 அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக டி.பி. ஏக்கநாயக்க இதற்கு முன்னர் ஊடகங்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here