எதிர்காலத்தில் முக்கியமாக திகழவிருக்கும் கிளிநொச்சி மாவட்டம்! சம்பந்தன்

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஓர் முக்கியம் பெற்ற மாவட்டமாக திகழும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணியளவில் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்வில் வைர விழாவை நினைவுப்படுத்தும் தூபி எதிர்கட்சி தலைவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கருத்துரைத்த அவர்,

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஓர் முக்கியம் பெற்ற மாவட்டமாக திகழும். கிளிநொச்சியில் பெரிய தொழில் பயிற்சி நிலையம் உள்ளது. இன்னும் பல தொழிற்சாலைகள் இங்கு வரவுள்ளன.

தொழிற்சாலைகளில் முக்கிய பணிகளில் இந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றுள்ளதோடு, கிராமத்தின் 80 வயது கடந்த மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து பாடசாலையிலும், வலயத்திலும் சேவையாற்றியவர்கள் எதிர்கட்சி தலைவரினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  குருகுலராஜா, ப.அரியரத்தினம், பாடசாலையில் கல்வி, விளையாட்டுக்களில் சாதனை நிலை நாட்டிய மாணவர்கள் எதிர்கட்சி தலைவரால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.    

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here