தமிழரே தமிழரை சுட்டுக்கொலை செய்வதா? சீ.வி ஆதங்கம்

தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி படுகொலை செய்வது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவொரு மோசமான சம்பவம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முக்கிய காரணங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக சுய பாதுகாப்பிற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

ஆனால் அண்மையில் யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், அங்கு சுய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எதுவும் நடக்கவில்லை.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பிழையான ஒன்றாகும். அவர்கள் பிழை செய்திருந்தால் அதனை தடுக்க பல வழிகள் காணப்படுகின்றன.

லொறியின் சில்லை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம். அல்லது வேறு வழிகளில் தடுத்திருக்கலாம். அதனை விடுத்து இளைஞர் மீது சூடு நடத்தியமை தவறான ஒன்றாகும்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமையானது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில், யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் துன்னாலைப் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here