`வேலைக்காரன்’ திரைப்படத்தை வெளிநாடுகளுக்கு விற்க முயற்சி

`வேலைக்காரன்’ திரைப்படத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கும் படக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தை 11 கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய படக்குழு முயற்சிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘வேலைக்காரன்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் ஃபஹத் ஃபாஸில் தமிழில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி அதிக விலைக்கு வாங்கியிருந்தது.

இந்த நிலையில்`வேலைக்காரன்’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை 11 கோடி ரூபாய் வரை விற்க படக்குழு முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here