சிறைக் கைதிகள் உறங்குவதற்கு பாய்களுக்கு பதிலாக மெத்தைகள்

சிறைக் கைதிகள் உறங்குவதற்கு பாய்களுக்கு பதிலாக மெத்தை வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

கைதிகள் உறங்குவதற்கு தேவையான மெத்தைகள் கைதிகளினால் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மெத்தைகளை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய நிதி வழங்கப்படும் எனவும், சுமார் 7000 மெத்தைகள் முதலில் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மரண தண்டனை கைதிகளுக்கும் இவ்வாறு தயாரிக்கும் மெத்தைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here