மலையகத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

கதிர்காமம் கந்தன் ஆலய கொடியேற்றத்தில் கலந்து கொள்ள மலையகத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்

மஸ்கெலியாவிலிருந்து இன்று காலை குறித்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

முதலில் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதரை வழிபட்டு பக்தர்கள் தமது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் நுவரெலியா, பதுளை, வெல்லவாய வழியாக புத்தள காட்டினூடாக 400 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக செல்லவுள்ளனர்.

கதிர்காமத்தை சென்றடைய நாளொன்றுக்கு 40 கிலோ மீட்டர் தூரம் இவர்கள் நடந்து செல்லவுள்ளனர்

இரவு நேரங்களில் ஆலயங்களிலும் விகாரைகளிலும் தங்குவதாக தெரிவித்த இவர்கள் 23.07.2017 அன்று இடம்பெறவுள்ள கொடியேற்றத்திற்கு முதல் நாள் கதிர்காமத்தை சென்றடையவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடக்கு, கிழக்கில் இருந்தும் முருக பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here