மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்! தபால் ஊழியர்கள் எச்சரிக்கை

மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக தபால் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் எழுத்து மூலம் வழங்கியுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்றத் தவறினால் எதிர்வரும் 19ம் திகதி மீளவும் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சின்தக்க பண்டார ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

72 மணித்தியால பணிப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் அரசாங்கத்தின் வாக்குறுதி காரணமாக கைவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவை பத்திரமொன்றைச் சமர்ப்பித்து தீர்வு வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வார கால அவகாசம் முடிவடையும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீளவும் 19ம் திகதி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here