ஊனமுற்ற பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 வருட சிறைத் தண்டனை

ஊனமுற்ற பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நபருக்கு எதிராக 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு எதிராக கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் நேற்று விதிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

கம்பஹா புத்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here