தமிழீழ விடுதலை இயக்க செயலாளரின் கடிதத்திற்கு டெனிஸ்வரன் பதில் கடிதம்

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா அனுப்பிய கடிதத்தற்கு அமைச்சர் இன்று பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த 13.07.2017ஆம் திகதி செயலாளர் ந.சிறிகாந்தாவினால் குறித்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

எமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டுள்ளதால், கட்சி அமைப்பு விதிகளின் பிரகாரம் உங்களுக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? இதற்கு காரணங்கள் இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்குமாறு அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைச்சர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “ஒரு வாரத்திற்கு கட்சியின் அமைப்பு விதிகளை எனக்கு அனுப்பி வைத்தால் இரு வார காலத்திற்குள் தமக்கான விளக்கத்தை அளிக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

பதில் கடிதம்..

செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா அனுப்பிய கடிதம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here